கிந்தோட்டை விடயத்தில் நீதியை நிலை நாட்ட, தான் தவறியுள்ளதாக கூறி மன்னிப்புகோரியுள்ள பொலிஸ் மா அதிபர் மன்னிப்பு கேட்பதை விட இராஜினாமா செய்வதேபொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்ச்க்ஷ தெரிவித்தார்.
பொன்னறுவையில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
ஒரு தவறு நிகழ்கிறது. அந்த தவறுக்கு உடனடியாக நீதியை நிலைநாட்ட இயலாதுபோனாலும் சற்று தாமதமாக நீதியை நிலைநாட்டுவதன் மூலம் எந்த பாதிப்பும் இல்லைஎன்றால் அப்படியான விடயங்களுக்கு என்னால் உடனடியாக நீதியை நிலைநாட்டமுடியாது போய்விட்டதென ஒருவர் கூறி மன்னிப்பு கோருவாராக இருந்தால் அதனைமன்னிக்கலாம்.
இன்னுமொரு விடயமுள்ளது.அந்த விடயத்துக்கு குறித்த உரிய நேரத்தில் தான் நீதியைநிலைநாட்ட வேண்டும். அதற்கு தவறினால் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். அதனைபின்னர் ஈடுசெய்ய முடியாது. அப்படியான விடயங்களுக்கு குறித்த சந்தர்ப்பத்தில்என்னால் நீதியை நிலைநாட்ட முடியாது என ஒருவர் கூறி மன்னிப்பு கோருவாராகஇருந்தால் அவரை மன்னிக்க முடியாது. பாதிப்புக்கு ஏற்ற வகையிலான தண்டனைவழங்க வேண்டும்.
கிந்தோட்டை போன்ற கலவர சந்தர்ப்பங்களின் போது உடனடியாக நீதியை நிலைநாட்டவேண்டும். அதன் போதான சிறு பொடு போக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதுஇலங்கை பொலிஸ் மா அதிபருக்கும் தெரியாததல்ல. அவ்வாறான சந்தர்ப்பத்தில்பொலிஸ் மா அதிபர், தான் நீதியை நிலைநாட்ட தவறிவிட்டதாக மன்னிப்பு கோருவதுபொருத்தமானதல்ல. பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பொலிசாரின்பொடுபோக்கினாலேயே கிந்தோட்டை கலவர பூமியாக மாறியதென கூறியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
கரணம் தப்பினால் மரணம் என்ற சந்தர்ப்பத்தில் இப்படி சிறு பிள்ளைகள் போன்று காரணம்சொல்லாமா என சிந்தித்து பாருங்கள். இவர் இது போன்று பல தடவைகள் மன்னிப்புகோரியுள்ளார். பொலிஸ் மா அதிபர் என்பவர் நெஞ்சை நிமிர்த்தி செல்ல வேண்டியஒருவர். அவர் எதற்கு எடுத்தாலும் மன்னிப்பு கோருவது அவர் வகிக்கும் பதவிக்குபொருத்தமானதல்ல. அவர் தனது பதவிக்கு மரியாதை வழங்குபவராக இருந்தால் தனதுபதவியை இராஜினாமா செய்ய வேண்டும். அதுவே இப் பதவியில் எதிர்காலத்தில் உட்காரஇருப்பவர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
பாடசாலை பிள்ளைகளைப் போல தவறு செய்வதும் அதற்கு மன்னிப்பு கோருவதும் எனஇதுவே பொலிஸ் மா அதிபருக்கு வாடிக்கையாகி போய்விட்டது என அவர் குறிப்பிட்டார்.


0 Comments