Subscribe Us

header ads

கற்பிட்டி முன் பள்ளி வரலாற்றில் முன் மாதிரியான சிறுவர் கண்காட்சி


(27/11/2017 ) கல்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் முன்பள்ளியில் வருடாந்த சிறுவர் கண்காட்சி நடைபெற்றது.

இதில் விஷேட அதிதிகளாக முன்னாள் உதவிக்கல்வி பணிப்பாளர் ஆசிரியர் S.T.M.பைருஸ் சமான் அவர்களும், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் S.L.நூஹூ லெப்பை ஆசிரியர், அல்ஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் S.M.ஐயூப் ஆசிரியர், முகத்துவார முஸ்லீம் மகாவித்தியாலய அதிபர் ஆசிரியர் ஹரமைன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

"இறைவன் மனிதனை பூமியில் படைத்து பூமியை வளப்படுத்தும்படி கேட்டுக்கொண்டான்" என்ற இறைவசனத்திற்கமைய இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் முன் பள்ளி வரலாற்றில் சின்னஞ்சிறு மாணவர்களின் கைகளால் வளர்க்கப்பட்ட செடிகள்,கொடிகள், கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்ததும் ,பல விதமான மரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

மேலும்இடப்பற்றாக்குறை காரணமாகவே இன்னும் விஷேடமாக செய்யமுடியாமல் போனதாகவும் ஆசிரியர்கள் கூறினார்கள்.

-Rizvi Hussain-






























Post a Comment

0 Comments