Subscribe Us

header ads

மானிய அடிப்படையில் யாழ்மாவட்ட விவசாயிகளுக்கு விதை உருளைகிழங்கு

பாறுக் ஷிஹான்



யாழ்மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக உருளைக்கிளங்கு பயிர் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு 50% மானிய அடிப்படையில் 267 மெற்றிக் தொன் விதை உருளைக்கிளங்கு நேற்று ( 25 ) மாலை திருநெல்வேலி  விவசாய திணைக்களத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது

       கடந்த வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதானால் மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு உருளைக்கிளங்கு பெற்று கொடுத்ததை போன்று இந்த வருடம் தங்களுக்கு மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு  விதை உருளைகிழங்கு கிடைக்கவில்லை என்று யாழ்மாவட்ட உருளைக்கிழங்கு உற்பத்தியாளர் விற்பனை கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் தெய்வேந்திரம் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தார் அதன் அடிப்படையில் இந்த விடையத்தை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது விவசாயிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாட ஏற்ப்பாடு செய்து கொடுத்தார் அதன் பயனாக இன்று இந்த விதை உருளைகிழங்குகள் எமது விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது

 எதிர்வரும் காலத்தில் யாழ்மாவட்ட விவசாயத்துறையை ஊக்குவிக்கும் முகமாக இளைஞனர்களையும் விவசாய செய்கையில் ஊக்குவித்து அதனூடாக நல்லதொரு விவசாய சமூகத்தை கட்டியெழுப்ப தான் என்றும் முன்னிற்ப்தாகவும் நாம் எல்லோரும் இணைந்து நல்லதொரு விவசாய சமுத்தி கட்டியெழுப்ப முன்வரும் அழைப்பு விடுத்துள்ளார்   





















Post a Comment

0 Comments