Subscribe Us

header ads

வாசிப்பு திறனை அதிகப்படுத்த பேஸ்புக் நண்பர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட ( பத்தாயிரம் புத்தகங்கள் திரட்டல்) திட்டம் மூலமாக கிடைக்ப்பெற்ற புத்தகங்கள் புத்தளம் ISOFT கல்லூரிக்கு வழங்கப்பட்டது (விபரங்கள் இணைப்ப)




#Facebook போன்ற சமூக ஊடகத்தை பயன்படுத்தி , பயனுள்ள வகையில் ஏதாவது திட்டத்தை மேற்கொள்ளும் நோக்கில் சில மாதங்கள் முன்பு நண்பர் Nusry Rahmathullah உடன் இணைந்து ஆரம்பம் செய்த ஒரு விடயமே #புத்தக_சவால் எனும் திட்டம்.

#பத்தாயிரம்_புத்தகங்கள் திரட்டல் என்று ஆரம்பமான இந்த பணிக்கு சிலர் மட்டுமே புத்தகங்களை வழங்கினார்கள் , இன்னும் சிலர் தருவதாக சொல்லி உள்ளனர்.

ஆங்கில பாண்டித்தியம் மிக்க ஒரு எழுத்தாளரின் புத்தகங்கள்/ ஒரு சமூக ஆர்வலரான ஆசிரியரின் புத்தகங்கள் / மரணித்த பத்திரிகையாளர் ஒருவரின் புத்தகங்கள் / ஒரு சட்டத்தரணியின் புத்தகங்கள் என்று கிடைக்க பெற்றோம். அதோடு எங்களது புத்தகங்களையும் இணைத்தோம்.


அவை அனைத்தையும் தகவல் தொழில் நுட்பத்திலும் / உயர் கல்வியை வழங்குவதிலும் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனமான Isoft Puttalam கல்லூரியின் மாணவர்களின் நலன்கருதி அங்கே #நூலகம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அக்கல்லூரி பணிப்பாளர் #சகோதரர்_அப்ராஸ் அவர்களிடம் கையளித்துள்ளோம்.

இப்பதிவானது நமக்கு புத்தகங்கள் வழங்கியோருக்கு சாட்சியாகவும் , தருவதாக சொல்லி இருப்போருக்கு நினைவூட்டலாகவும் , இன்னும் சிலருக்கு புத்தகம் வழங்கும் எண்ணத்தை உண்டாக்கும் நோக்கிலும் பதியப்படுகிறது.

உங்கள் புத்தகங்களையும் தாராளமாக வழங்கலாம்...

அது மற்றொரு இடத்தின் #மாணவர்களின் / #மக்களின்வாசிப்புக்கு உதவலாம்.


ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்.

-Infas Brother-


Post a Comment

0 Comments