Subscribe Us

header ads

இதான் ஆண் விபச்சாரம்(மா)

உங்கள் நண்பன் தமீம்



உணர்வுகள் என்னை சீன்ட ஆசைகள் வாட்டி எடுக்க இளமை ஊசலாட வயதோ தூண்டில் இட்டு இழுக்க கலைந்து செல்கிறது நித்தம் நித்தம் திருமண கனவு சீதன சீமாங்களால்
பல அரங்கேற்றம் அரங்கேறியது மாப்பிள்ளையெனும் மேடைதனிலே சீதனமோ காதநாயகனாய் சிதைந்து போகிறது எந்தன் கற்பனைகள் யாவும் காற்றினிலே கண்ணீராக
என்னுள்ளே கருகிப்போன பெண்மை உணர்வுக்கு உயிரூட்டவோ கலைந்து போன கனவுகளையும் கறைந்து போகும் இளமையை சுவாசிக்கவோ யாருமே யோசிக்கவில்லை.
சீதனம் கேட்டே என்னை சிதைத்து சென்றார்கள் முதுகெலும்பு அற்ற ஆண் கூட்டம் ....!
கடிகார முள்கூட களைத்து போய் நின்றுவிடும்  சில நேரங்களில் .... ஆனால் ஒய்வுக்கே ஒய்வுகொடுத்து ஒய்வரிய ஒப்பில்லா துன்பத்தின் தவபுதல்வியாய் கண்ணீரின் விழா நாயகியாய் ஓய்வு இல்லாமல் கண்ணீர் வடிக்கிறேன் வரதட்ச்சனையின் வாட்டத்தினால் வாடி வதங்கி
மாழையிடும் மானவாளன் வருவானோ அன்பு முத்தம் தருவானோ ஏங்கி தவிக்கிறது இளமை மானவாளக்கு தேவை மாடி வீடு மடிந்துவிடுகிறது என் கனவுகள் யாவும் கற்பனையாகவே
கணவன் வருவானே என்னை கற்பமாக்குவானோ நெற்பமாய் தொட்டு ரசிப்பேனோ என் செல்ல குழந்தையை,??!"
கணவனுக்கு வேண்டும் பல்சர் பைக் என்னை அறியாமலே பறந்து செல்கிறது என் வயது
விலைபேச ஆயிரம் மாப்பிள்ளை வியாபாரிகள் நானோ கொஞ்சம் விலை அதிகம் சாய்ந்து விடுகிறேன் கண்ணீரோடு விபச்சாரமா?? வியாபாரமா?? திருமணமா?? இதான் ஆண் விபச்சாரம்
திருமண வைபவ மேல தாள சத்தம் பக்கத்து வீட்டினிலே எந்தன் கைபிடி இதயம் வெடித்து சிதற்கிறது மடிந்து விடுவனோ கழியா கண்ணியக எனற ஏக்கத்தில்
ஏக்கமோ ஏங்க தூக்கமோ கொன்று விடுகிறது தனிமையினிலே
கழியாத கன்னி தணியாத இளமை சிதையாத மௌனம் யாவுமே எந்தன் வறுமை தீயிலே தீய்ந்து செல்கிறது வரதட்ச்சனையின் வீர விளையாட்டால்
நான் கல்லில் செருக்கி சிற்பம் இல்லை உணர்வுகள் இறந்த ஜடமும் இல்லை  உணர்ச்சிகள் உள்ள சாதாரண பெண்
என் உணர்வுக்கும் உயிர் உண்டு
உயிர் இருந்தும் உயிரற்ற ஜடாமாய் வழும் கொடுரம் எனக்கு மட்டுமே தெரியும் தனிமை என்னை வாட்டும் போது என் உணர்வுக்கு பதில் சொல்ல முடியாத மௌனியாகிறேன் கலங்கிறேன் துடிக்கிறேன் தனிமையெனும் முற்களின் மேலே நித்தம் நித்தம் சொட்டுகிறது இரத்த கண்ணீர்
வெற்க்கம் கெட்டு முதுகெலும்பு இல்லா ஆண் மகனே
நான் சிதைந்து சிந்திகிறேன் கண்ணீர் உனக்கு புரியவில்லையா???
இன்னும் சொல்லவா சொன்னால் துன்பம் அல்லவா
இதான் ஆண் விபச்சாரமா??? இதான் ஆண் மகனின் வீரமோ???

இருந்தும் யாசிக்கிறேன் எந்தன் வயது தாண்டிய எல்லைய வேலியிடத் துணியும் எந்தன் பெண்மைக்காக ஓர் ஆண் மகனை கிடைக்குமா என யோசிக்கிறேன்...

Post a Comment

0 Comments