24/08/2017 அன்று முன்னால் ACMC கல்பிட்டி அமைப்பாளர் முஸம்மில் அவர்களின் பாறிய முயற்சியினால் பல போரட்டங்களுக்கு மத்தியில் ACMC புத்தளம் அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ,கல்பிட்டி ACMC அமைப்பாளர் ஆப்தீன் எஹியா,மற்றும் ACMC உயர்பீட உறுப்பினர்களால் மிகவும் விமர்சையாக கல்பிட்டி யுவதிகள் பாறிய எதிர்பார்ப்புக்ளுடன் திறந்து வைக்கப்பட்டது.
ஆனால் இந்த யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலையம் நான்கு நாட்களாக மூடப்பட்டுள்ளது இதனால் ஆசையோடும் ஆர்வத்தோடும் பல கனவுகளோடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்த வறிய குடும்பத்து யுவதிகள் மிகவும் பாதிக்கப்பட்டு கவளையோடு காணப்படுகின்ரார்கள்.
இந்நிலையம் மூடப்பட்டதற்கான காரணத்தை வீட்டு உறிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு ஆறு (06) மாதம் வீட்டு வாடகை தரவில்லை என்பதனாலேயே தான் பூட்டுப்போட்டு மூடியதாகவும் அவர்ளுடைய பாதுகாப்புக்காக அவர்களும் ஒரு பூட்டு போட்டுள்ளதாகவும் கூறினார் முழு வாடகை பாக்கியையும் தந்தால் தான் மீண்டும் திறக்க அனுமதிப்பதாகவும் கூறினார்.
இந்த தையல் பயிற்சி நிலையம் கல்பிட்டி மக்கள் மத்தியில் பெறிய சந்தேகம் ஒன்றை தோற்றுவித்துள்ளது.ஏற்கனவே ACMC கட்சியினால் ஆரம்பிக்கப்படவிருந்த காபட் வீதிகள் கைவிடப்பட்டுள்ளது அதே போல் ACMC கட்சியினால் தற்போது கல்பிட்டி அபிவிருத்திகள் எதும் நடைபெறாமையும் நடைபெருவதற்கான எந்த ஏற்பாடுகள் நடைபெறாமையும் கல்பிட்டி மக்களை ACMC கட்சி கைவிட்டுவுள்ளதா அல்லது அரசியல் அபிவருத்திகள் மேற்கொள்ளக்கூடாது என்ற நோக்கமா ?.அன்மைய நாட்களில் ACMC கட்சியினால் மக்களுக்கு வைகமாக சேவைகள் நடைபெற்றன .சேவைகள் நடைபெருவதற்கான திட்டங்கள் போடப்பட்டன.
கல்பிட்டி ACMC அமைப்பாளர் செய்னுல் ஆப்தீன் எஹியா அவர்களே இதற்கான பதிலை தாங்களே தரவேண்டும் இப்பிரச்சினைகளுக்கான தீர்வு களை உடனடியாக எடுக்க வேண்டும் .தாங்கள் ACMC அமைப்பாளராக உத்தியோகபூர்வமாக பதவிவேற்றும் இதுவரையும் கல்பிட்டிக்கு சமூகம் தராததும் கல்பிட்டி ஆதரவாளர்களுடன் கலந்தாலோசிக்க வில்லை என்று தங்கள் மீது குறை கூறப்படுகிறது.
ஆகவே அமைப்பாளர் ஆப்தீன் எஹியா அவர்களே கூடிய விரைவில் கல்பிட்டிக்கு சமுகம் தந்து இங்கு காணப்படும் குறைபாடுகள் உடனடியாக தீர்த்து வைக்குமாறும் மூடப்பட்டிருக்கும் யுவதிகளின் கனவு இல்லமான தையல் பயிற்சி நிலையத்தை திறந்து நல்லமுறையில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஆவன செய்யுமாறும் கல்பிட்டி மக்கள் சார்பாகவும் யுவதிகளின் பெற்றோர் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்.அதே போல் கல்பிட்டியில் முரன்பட்டிருப்வர்களுடன் சுமூகமாக பேசி அவர்களையும் இணைத்துக்கொண்டு சிறந்த முறையில் முன்பைப்போல கல்பிட்டியில் ACMC கட்சியை வழிநடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
0 Comments