கல்பிட்டியில் பல உள்ளக வீதிகள் காபட் வீதிகளாக ,கொங்ரீட் வீதிகளாக காட்சியளிப்பதும் பல வீதிகள் அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதும் சந்தோஷமானதும் வரவேற்க தக்கதுமான விடயமாக இருந்தாலும் இன்னும் சில முக்கியமான வீதிகள் மிகவும் பாதிப்படைந்து மழைக்காலங்களில் மாணவர்களும் மக்களும் பயணம் செய்ய முடியாமல் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்கும் நிலையிலுள்ள வீதிகளில் அல் மனார் பாடசாலை வீதியும் ஒன்று.
ஆகவே இந்த பாடசாலையில் கல்வி சின்னஞ்சிறார்களுக்காக வேண்டியாவது இவ்வீதியை சீரமைத்து கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரசில்வாதிகளான முன்னாள் பிரதேசசபை உறுப்பினரும் மண்டலக்குடா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளருமான இன்பாஸ் அவர்களிடமும் அதே போல் முன்னாள் எதிர் கட்சி தலைவரும் மண்டலக்குடா ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருமான ஆப்தீன் அலாவூதீன் அவர்களிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுக்கின்றனர் அல் மனார் கிராம மக்களும் மாணவர்களும்....
-Rizvi Hussain-
0 Comments