Subscribe Us

header ads

மீண்டும் தோண்டப்படும் தாஜூடீனின் கல்லறை! முக்கியஸ்தரின் மகனிடம் விசாரணை


நாரஹென்பிட்டிய, ஷாலிகா மைதானத்தின் அருகில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசிம் தாஜூடீனின் சடலம் எதிர்வரும் வாரம் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது.

இவ் ரகர் வீரர் பயணித்த கார் தீப்பற்றியமையினால் உயிரிழந்ததாக கூறப்பட்ட போதும், இது திட்டமிடப்பட்ட கொலை என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை சந்தேகத்திற்குரியவை என கடந்த நாட்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

எனவே சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அறிக்கைளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டப்பட்டது.

சம்பவத்தின் போது அதனை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு முயற்சித்த காவல்துறை அதிகாரி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கியஸ்தரின் மகனிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் தொடர்பு காரணமாக ஏற்பட்ட மோதலினால் இக்கொலை இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments