Subscribe Us

header ads

எதிர்காலத்தில் உங்களோடு சேர்ந்து பயணிக்க நாம் தயார் ; கைது செய்யப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் தெரிவிப்பு ..


எதிர்காலத்தில் நாம் உங்களோடு சேர்ந்து பயணிப்போம் என ஹம்பாந்தோட்டையில் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் குடும்ப உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷஅவர்களிடம் குறிப்பிட்டுள்ளனர்.

அரச சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டமைக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களை இன்று அவர்களதுஇல்லங்களுக்கு சென்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ சந்தித்த போதேஅவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதனை குறிப்பிட்டனர்.

அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு  சிறைசென்றமை தொடர்பில் தாங்கள் கவலை அடையவில்லை என குறிப்பிட்ட அவர்கள்எதிர்காலத்தில் நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் அரசியல் பயணத்திற்கு பலம் சேர்க்கசெயற்படுவதாக குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக தங்களால் முடிந்த அனைத்துஉதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அங்கு எடுத்துக்கூறிய பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ அவர்கள் நாளை மறுதினம் குறித்த வழக்கில் ஆஜராகஜனாதிபதி சட்டத்தரணிகளும் ஆஜராகி கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை எடுக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் டி வி சானக அவர்களும் இதன் போது அங்குபிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments