அஸ்ஸலாமு அழைக்கும்
பலரிடம் பொய் சொல்லி பணங்களை கொள்ளையடித்த ஒருவரைப் பற்றி நான் தகவல் அறிவிக்க விரும்புகின்றேன். நானும் அவரினால் ஏமாற்றப்பட்டதன் மூலம் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்கான பல ஆதாரங்களும் என்னிடம் உள்ளது .
இதனை உங்களுடைய சேவையிநூடாக மற்றவர்களுக்கு தெரியப் படுத்துவதனால் மேலும் பலரை இவரிடம் இருந்து காப்பற்ற முடியும் என்று நம்புகின்றேன்.
என்னிடம் உள்ள அணைத்து ஆதரங்களையும் உங்களுடைய செய்தியாளர்களிடம் நான் காண்பிக்க தயாராக உள்ளேன், அது மட்டும் அல்லாது அவரினால் ஏமாற்றப்பட்ட இன்னுமொருவரையும் அறிமுகம் செய்யவும் உள்ளேன்.
தயவு செய்தது அந்த நபருடைய பொய், பித்தலாட்டம், டுபாக்கூர் வேலைகளை மற்றவர்களுக்கு உங்கள் சேவையின் ஊடாக தெரியப்படுத்தி மற்றவர்களை அந்த நபரிடம் இருந்து காப்பாற்றவும் .
அவரைப் பற்றி சில தகவல் .
அந்த நபர் ஒரு முஸ்லிம் வாலிபர். இவர் தலை நகர் கொழும்பில் உள்ள எனது வீட்டுக்கு அருகாமையில் சில காலம் தங்கி இருந்ததன் மூலம் எனக்கு அறிமுகமானார். எமது முஸ்லிம் சகோதரர் என்ற அடிபடையில் நாளாந்தம் சலாம் சொல்லும் வழக்கம் அதிகமானது . அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிட்டார். அவருடைய முகம், பெயர் , தொலைபேசி இலக்கம் தவிர வெறு எந்த தகவலும் அறிந்திருக்கவில்லை.
சென்ற ரமழான் மாதம் திடீர் என அவரிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது, அன்று அவர் கூறிய வார்த்தையில் நம்பிக்கை வைத்து பத்து இலட்ச்சத்துக்கும் மேலான பணத்தை அவரிடம் கொடுத்து இன்று மூன்று மாதங்களாக ஏமாந்து கொண்டிரிகின்றேன்.
அதன் பிறகுதான் அவரைப்பறி விசாரித்ததில் அவர் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சாய்ந்தமருது என்னும் ஊரை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் கடந்த 06 வருடங்களாக இவர் தான் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றுவதாக கூறி பலரை அரச தொழில் தருவதாகவும், வெளிநாட்டு வேலைக்கான வீசாக்கள் பெற்றுத் தருவதாகவும், அரச காணிகள் குடியிருப்புக்களை பெற்றுத் தருவதாகவும் கூறி பல இலட்சக்கணக்கான பணங்களை வாங்கி பலரையும் ஏமற்றிக்கொண்டிருப்பது தெரியக்கிடைத்தது .
அவருடை பெயர், வீட்டு விலாசம், அடையாள அட்டை இலக்கம் என்பன தற்பொழுது என்னிடம் உள்ளது , அதனுடன் நான் பணம் அனுப்பியதற்கான பற்றுச்சீட்டுகள், வங்கி மூலம் திருப்பி அனுப்பப்பட்ட காசோலைகள் விபரம், மற்றும் எஸ் எம் எஸ் , வாட்ஸ் அப் குறும் தகவல்களையும் உங்கள் செய்தியாளர்களிடம் காண்பிக்க தயாராக உள்ளேன் .
பணத்தை திரும்ம்ப கேட்டதற்கு, என்னை எங்கு வேணுமென்றாலும் போகட்டுமாம், எல்லாவற்றையும் அவர் முகம் கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூருகின்றார். மற்றும் நீதிமன்றம் சென்றால் , அவரிடம் எனக்கு திருப்பிதருவதற்கு பணம் இல்லை என்றும், மதாமாதம் 10,000/- ரூபா தருவதாகவும் நீதிமன்றத்தில் கூறுவாராம்.
என்னுடைய பணம் கிடைக்க விட்டாலும் பரவாயில்லை , தயவு செய்து இனிமேலும் இவரிடம் மற்றவர்கள் ஏமாறாமல் இருக்க எல்லோருக்கும் இதனை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.(Jaffna Muslim)
இப்படிக்கு , உங்களுடய உதவியை நாடிநிற்கும்
முகம்து சரிப்


0 Comments