Subscribe Us

header ads

“மெர்சல் படத்தில் விஜய் கூறுவது போல், அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்!” : ரஞ்சன் ராமநாயக்க



இலங்கையை சேர்ந்த பிரபல நடிகரும், அந்நாட்டின் சமூக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சருமான ரஞ்சன் ராமநாயகே, மெர்சல் படத்தை வெகுவாக பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். 

மெர்சல் திரைப்படம், அனைத்து அரசியல்வாதிகளும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், என்று அவர் கூறியுள்ளார். இதுவொரு ஆக்சன் கலந்த மசாலா படமாக இருந்தாலும், மக்களுக்கு நல்ல செய்தியை கூறியிருக்கிறது என்றும், இதற்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லிக்கு, பாராட்டு தெரிவித்துக் கொள்வதாகவும், இலங்கை அமைச்சர் ரஞ்சன் கூறியுள்ளார். 

மெர்சல் திரைப்படம், மருத்துவத்துறை மாபியாக்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியுள்ளது, என்று கூறியுள்ள அவர், இப்படத்தில் விஜய் கூறுவது போல், அரசியல்வாதிகளும் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெற வேண்டும், என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments