Subscribe Us

header ads

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய மேற்கிந்திய தீவுகளின் வெற்றிக்களிப்பை பாருங்கள்.

உலகக்கோப்பை 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த பரபரப்பான போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. ஆஸ்திரேலியா தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து பங்களாதேஷுக்கு சமமாக புள்ளிகள் எதையும் பெறாமல் பரிதாபமான நிலையில் உள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. மாக்ஸ்வெல் 45 ரன்களும், ஹாட்ஜ் 35 ரன்களும் எடுத்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பட்ரி, சாமுவேல்,நரேன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 179 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 2 சிக்சர்கள், மற்றும் 6 பவுண்டரிகளுடன் 53 ரன்களை குவித்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 19.4 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி நேரத்தில் 16 பந்துகளில் 34 ரன்கள் அதிரடியாக எடுத்த ஷாமி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



Post a Comment

0 Comments