“நான் இங்கே ‘I’m single..!’ என்பது என்னை பொருத்த வரையில் ஒரு Concept தான்.அது உங்கள் பார்வைக்கு எப்படி தெரிகிறது என்பது எனக்கு தெரியாது.அது எப்படி இருந்தாலும் எனக்கு அதை பற்றி கவலை கிடையாது.”
எனக்கு இப்போதெல்லாம் காதலர்கள் மீது வெறுப்பும் கோபமும் தான் வருகிறது காரணம் இங்கே உண்மையான காதல் விரல் வைத்து எண்ணும் அளவுக்கு மட்டுமே உள்ளது ஏனைய காதலர்கள் தன்னுடைய இச்சைக்காக மட்டுமே காதல் என்ற பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள்.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் நீங்கள் காதலிப்பவர்களிடம் உடம்பை போட்டோ பிடித்து அனுப்ப சொல்கிறீர்களே அதே போல் உங்கள் சகோதரியிடம் வேறொருவன் கேட்கமாட்டான் என்பதில் உங்களுக்கு என்ன நிச்சயம்.!
பல வருடமாக காதலித்தும் தன் காதலியின் கையை கூட நான் இன்று வரை தொட்டது இல்லை என்று சொல்லும் காதல் எங்கே? பழகி இரண்டு மாதத்தில் dating இற்கு அழைத்து செல்லும் உங்கள் காதல் எங்கே.?
பெண்களே! நீங்கள் உங்கள் காதலனுக்கு அனுப்பிய உங்களுடைய ஒவ்வொரு அரைகுறை போட்டோக்களும் காணொளிகளும் இன்று பல வட்சப் குருப்புகளிலும் பேஸ்புக்கிலும் வளம் வருவதை நீங்கள் அறிவீர்களா? இல்லை. காரணம் நீங்கள் அவன் மீது வைத்த நம்பிக்கை. காதலில் நம்பிக்கை இருக்க வேண்டும் ஆனால் இது போன்ற கேவலமான விடயங்களில் நம்பிக்கை இருப்பது உங்கள் முட்டாள் தனம்.
உங்கள் காதலன் ‘நீ குளிப்பதை வீடியோ எடுத்து எனக்கு அனுப்பு அல்லது உன்னுடைய முழு உடம்பையும் போட்டோ எடுத்து அனுப்பு.’என்று கட்டளை இட்டால் ‘அதை அனுப்பினால் தான் என்னை காதலிப்பாயா.? என்று எந்த அச்சமும் இன்றி கேளுங்கள். அவன் ’ஆம்’ என்று பதிலளித்தால் அந்த பதிலிலே உங்கள் காதலின் தரம் எந் அளவில் இருக்கிறது என்பதினை அறிந்து கொள்வீர்கள்.
இன்னும் சில ஆண்கள் இருக்கிறார்கள் பெண்களின் இன்பாக்சில் போய் ‘உள்ளாடை அளவு என்ன என்று கேட்பது, உணர்வு நேரங்களில் என்ன பண்ணுவிங்க.?,sex படம் அனுப்பவா.?’ இப்டி பல கீழ்த்தரமான விடயங்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
குற்றம் உள்ள உள்ளத்தில் ‘இவன் என்ன உத்தமனா.? என்ற கேள்வி எழும். அப்படி எழுந்தால் நான் மார் தட்டி கொள்ளுவேன் ‘ஆம்,இந்த விடயத்தில் நான் உத்தமபுத்திரன்’என்று.
பி.கு-இப் பதிவு நான் கேட்டதையும் பார்த்ததையும் வைத்து எழுதுகிறேன் மாறாக பெண்களை கவர்வதற்காகவோ என்னை நல்லவன் என்று அடையாள படுத்தி கொள்வதற்காகவோ அல்ல.
இவன்
Nifras Hani
0 Comments