Subscribe Us

header ads

புத்தள பகுதியில் தனது இளம் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த அவலம்


ஸ்ரீலங்காவின் மொனராகலை மாவட்டம் புத்தள பகுதியில் தனது இளம் மனைவியை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, அதனை பிற நபர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒருவரை புத்தள பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து 24 வயதுடைய இளம் பெண் (குறித்த சந்தேக நபரது மனைவி) புத்தள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டைப் பதிவுசெய்த பொலிஸார் சம்மந்தப்பட்ட நபரைக் கைது செய்து வெல்லவாய நீதிமன்றில் ஆயர்ப்படுத்தியுள்ளனர்.
இதனை விசாரித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை பொலிஸ் காவலின்கீழ் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் தனது மனைவி மீது சந்தேகமடைந்திருந்ததாகவும் அவர்களுக்கிடையில் அவ்வப்போது குடும்பப் பிணக்குகள் ஏற்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள்மூலம் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments