Subscribe Us

header ads

ஹஜ் காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை சமாளிக்க சவுதி அரசு ஐந்து அம்ச திட்டம்


ஹஜ் காலத்தில் ஏற்படக்கூடிய அவசர நிலைமைகளை சமாளிக்க ஐந்து அம்ச திட்டம் ஒன்றின் அடிப்படையிலான செயற்திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது சவூதி அரசு.

ஆபத்துகள் தொடர்பிலான கணிப்பீடு, நடவடிக்கைகளைப் பகிர்தல்,உணவு – எரிபொருள் விநியோகம், தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு போன்றன இதில் அடங்குகின்றன.

இதேவேளை, தன்னார்வத் தொண்டர்களாக பெருமளவு இளைஞர்கள் இணைந்து கொண்டுள்ள நிலையில் சுமார் 32 அரச நிறுவனங்களுடன் இணைந்து ஹஜ்ஜாஜிகளுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கும் பாரிய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது

மேலும் இதுவரை தொற்று நோய்ப் பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Mohamed Hasil)

Post a Comment

0 Comments