உண்மை கூறுங்கள் காழ்ப்புணர்வில் வதந்திகளை பரப்பாதீர்
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் கட்டாரில் இருக்கும் போது அமைச்சர் ரிசாட் அவர்களும் கட்டாருக்கு வேலை நிமிர்த்தம் வந்திருந்தார். இதன் போது அமைச்சர் அவர்களின் வேலைப் பளுவுக்கு மத்தியில் அமைச்சரை சந்திப்பதற்கு ஓர் நேரம் ஒதுக்கித் தரும் படி கேட்டிருந்தேன்.
அமைச்சர் அவர்களின் பழக்கங்களில் ஒன்று எவர் எந்நேரமாக இருந்தாலும் சந்திக்க வேண்டும் என்றால் எவ்வளவுதான் வேலைப்பளுவாக இருந்தாலும் ஓர் நேரம் ஒதுக்கி கொடுப்பார் இது அவரின் நற்பண்புகளில் ஒன்று.
அமைச்சர் இரவு 11 மணிக்கு தான் இருந்த ஹோட்டலுக்கு வரச் சொல்லி இருந்தார் நானும் எனது நண்பர்கள் இருவரும் சென்றிருந்தோம். இனி நள்ளிரவு நேரம் நெருங்கியும் அமைச்சரின் கூட்டம் முடியவில்லை எப்படியோ ஒரு மணிக்கு சந்திச்சாயிற்று.
உண்மையில் அமைச்சர் எங்களுக்கு வாக்குறுதி அளித்தற்காகவே சந்தித்திருந்தார். ஏனேனில் முகத்தில் தெரிந்தது அவரின் சோர்வு. இனி அமைச்சரிடன் பேசும் அமைச்சர் தனக்கு தலைவலியாக உள்ளது பெனடோல் வேனும் என்று என் கூட வந்த நண்பர் அவரது காரில் இருந்த பெனடோலைக் கொடுக்க "பெனடோலைப் பருக தண்ணிர் வேண்டும் அதற்கு ன் கைகளால் உடைத்து தண்ணிரை கிளாசில் ஊற்றீக் கொடுக்க அமைச்சர் குடித்தார் " இதன் போது எனது நண்பர் இவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்திருந்தார்.
அமைசரை சந்தித்த புகைப்படத்தை முக நூலில் பதி விறக்கம் செய்திருந்தேன். அமைச்சர் தண்ணீர் குடித்த புகைப்படத்திதை தணியாக வெட்டி ( Crop) அமைச்சரை ஓர் மது குடிப்பதை போன்று ஓர் பிறப்பிலும் வளர்ப்பிலும் ஒழுக்கமில்லாதவனே இந்த யலை அரங்கேற்றியுள்ளான்.
இதன் உண்மைத் தன்மையறியாத சிலரும் அமைச்சர் மீது கொண்ட காழ்ப்புணர்பினை பழிதீர்த்துக் கொள்ள இதனை சமூகவலைல்லளங்களில் பதிவிட்டு கேவலப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
உண்மையை அறிந்து சரியான தெளிவைக் கொண்டு சரியான விடயத்தை பரப்புங்கள். அமைச்சரின் பன்பையறியாவர்கள் இங்கு கூப்பாடு போட எத்தணிக்கவேண்டாம் .
ஐவேளைத் தோழுகையின் போது அள்ளாஹ் மிகப் பெரியவன் என்றே தக்பீர் கட்டுகின்றோம். அவன் மீது ஆனையாக நடந்த சம்பவத்தை தெளிவு படுத்தியுள்ளேன். இனியும் வீண் வதந்திகளை பரப்ப எத்தணிக்காதீர்.
( சம்பவம் தொடர்பான படத்தினை இனைத்துள்ளேன்)
-Samzul A Rasheed-
0 Comments