கொரியாவில் தொழிற்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஸ்ரீலங்கா நாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் தேகு என்ற பகுதியிலுள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சாம் சௌமிய பாலித என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நூல் சுற்றும் இயந்திரத்தில் சிக்கியிருந்த நூலினை எடுத்து விடுவதற்காக செல்லும் போது மற்றொரு இயந்திரத்தினுள் விழுந்த இவ் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
0 Comments