முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை படுகொலை செய்வதற்கு அல்லது அவரது பிரஜாவுரிமையை பறித்து தனிமைப்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவது குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தகவலை முன்னாள் அமைச்சரும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திஸாநாயக்க வெளியிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் இரத்தோட்டை தொகுதி அமைப்பாளர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தான், துருக்கி, சிரியா போன்ற நாடுகளுக்கு அமெரிக்கா செய்ததைப் போன்றே ஸ்ரீலங்காவுக்கும் செய்வதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும், அதற்கு உள்நாட்டிலுள்ள சிலர் உடந்தை என்றும் சாலிந்த திஸாநாயக்க கூறினார்.
0 Comments