ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் சாதாரண தர பரீட்சையில் தோல்வியடைந்த 96 பேரும், உயர்தரப் பரீட்சையில் தோல்வியடைந்த 112 உறுப்பினர்களும் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பதுளை தபால் அலுவலகக் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இந்த தகவலை வெளியிட்டார்.
இதற்கான தவறை யார் புரிந்தது? உணவுப் பொதிக்கும், கூரை தகடுகள், தளபாடங்கள், பணத்திற்காக வாக்களித்தால் இப்படியான தலைவிதியே நாட்டிற்கு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments