பிபிசியில் பணியாற்றி வரும் Raworth(48) என்ற செய்தி வாசிப்பாளர், லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த கிரிக்கெட் தொடர் குறித்த செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, இவருக்கு பின்புறத்தில் இருந்த ஒரு கணனியில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. நேரலையில் அந்த காட்சியும் சேர்ந்து ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த காட்சியை Lyndsey Robinson என்ற பார்வையாளர், தனது முகநூல் பக்கத்தில், அந்த புகைப்படத்தை வெளியிட்டு ஒளிபரப்பான விளையாட்டு செய்தியில் இதனை யாராவது கவனித்தீர்களா என கேட்டுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பிபிசியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேற்கொண்டு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
0 Comments