பெண்களின் கழிப்பறைக்குள் கண்காணிப்புக் கமரா பொருத்தியதாக வைத்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசாங்க வைத்தியசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய வைத்தியருக்கு எதிராக அனுராதபுரம் மாவட்டத்தின் தலைமைப் பொலிஸ் நிலையத்தினால், அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்தோடு தொடர்புபட்ட வைத்தியரை எதிர்வரும் மாதம் 15ஆம் திகதி அ நுராதபுரம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு ஆதாரத்துடனான காரணங்கள் உள்ளதாக, சட்ட மா அதிபருக்கு கிடைத்த தகவல்களுக்கமையவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
0 Comments