கல்பிட்டி பிரதேச சபையின் புதிய கட்டடத்தொகுதியில் இன்று தொடக்கம் ஆரம்பமாகும் நிர்வாக முறைமைக்கு நன்றி தெரிவிக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ்(ACMC)
கல்பிட்டி பிரதேச சபை கட்டட நிர்மான வேலை காரணமாக தற்காலிகமாக நுரைச்சோலையில் இயங்கி வந்த கல்பிட்டி பிரதேச சபை காரியாலயம் இன்று பிரதேச சபை செயலாளரின் தலைமையில் மீண்டும் கல்பிட்டி நகரத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற பிரதேச சபை காரியாலயத்தில் தமது நிர்வாக விடயங்களை ஆரம்பித்தமை தொடர்பில் கல்பிட்டி அகில இலங்கை மக்கள் காங்ரஸ் சார்பாக கல்பிட்டி பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்ரசின் பிரதான அமைப்பாளர் ஜனாப் A.R.M. முஸம்மில் அவர்கள் சபை செயலாளர் மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்ததுடன் ACMCயின் கல்பிட்டி பிரதேச பிரதான அமைப்பார் ஜனாப் முஸம்மில் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் சிலரும் நேரில் சென்று வாழ்த்து மடல் ஒன்றினையும் கல்பிட்டி பிரதேச சபை செயலாளரிடத்தில் கையளித்தனர்.
எதிர் வரும் காலங்களில் தமது பிரதேச சபை முன்னெடுக்கின்ற சகல நல்ல விடயங்களுக்கும் அமைப்பாளரிடம் ஒத்துழைப்பை சபை செயலாளர் வினவிக்கொண்டதற்கினங்க அமைப்பாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் சபையின் நல்ல திட்டங்களுக்கான ஒத்துழைப்பை தருவதாக கூரினார்.
இன்ஷா அல்லாஹ் கல்பிட்டி பிரதேசத்தில் நாம் இலந்த பல விடயங்களை கருத்திற் கொண்டு இனி வரும் காலங்களை எமது பரம்பரையினருக்கு பயன் தரும் வகையில் எமது சேவைப் பயணத்தை தொடர்வதற்கு நாங்கள் ஒன்று பட தயாராகுவோம்.
ஒன்று படுவோம் வென்று வளர்வோம்.
0 Comments