சுற்றுலா இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவிக்கொண்ட இலங்கை அணி, தன்னகத்தே கொண்டிருந்த வரலாறு ஒன்றை இழந்துள்ளது. இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, இலங்கை மண்ணில் புதிய வரலாறு ஒன்றையும் படைத்துள்ளது.
இலங்கை மற்றும் சுற்றுலா இந்திய அணிக்கிடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெற்றிப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியொன்றில் தமது தாய் நாட்டில் வைத்து முதன் முறையாக இன்னிங்ஸ் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளது.
இதற்கு முன்னர் இலங்கை அணி தாய் மண்ணில் இந்திய அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியிருக்கவில்லை. எனினும், நேற்றைய நாளுடன் நான்கே தினதில் நிறைவடைந்த இந்த போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவி தனது வரலாறையும் இழந்துள்ளது.
மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று இந்தியா அணி தொடரை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments