ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் தொழுகை செய்யும் இஸ்லாமிய வீரருக்கு சக வீரர் பாதுகாப்பு கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தான் எல்லைப் பகுதி எப்போதும் பதற்றமாகவே காணப்படுகிறது. இதனால் அங்கு சுற்றியுள்ள பகுதிகள் இராணுவ வீரர்கள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் மத்திய ரிசர்வ் படை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சக வீரரான இஸ்லாமிய வீரர் அங்கிருக்கு கடை ஒன்றின் அருகே தொழுகை செய்கிறார்.
அப்போது அருகில் இருக்கும் மற்றொரு ஹிந்து வீரர் அவருக்கு பதிலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். இப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments