அப்துல் கலாம் சிலைக்கு அருகே குரான் மற்றும் பைபிளை வைத்த அவரது அண்ணன் பேரன் சலீம் மீது தங்கச்சி மடம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை ராமேஸ்வரம் பேக்கரும்பில் பிரதமர் மோடி கடந்த 27ல் திறந்துவைத்தார்.
அப்துல் கலாமின் மணிமண்டபத்தில் அவர் வீணை வாசிப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டதும், அதனருகில் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மட்டும் வைக்கப்பட்டது. இந்த விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், மணிமண்டபத்துக்கு வந்த அப்துல்கலாமின் அண்ணன் பேரன் சலீம், அப்துல் கலாமின் சிலைக்கு அருகே பகவத் கீதைக்கு அருகில் குரான் மற்றும் பைபிள் ஆகிய புனித நூல்களையும் வைத்தார்.
பகவத் கீதையின் அருகில் குரானை வைத்து இந்து மதத்தை சலீம் அவமதித்து விட்டதாக இந்துமக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தங்கச்சிமடம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதனையடுத்து அப்துல் கலாம் சிலைக்கு அருகே வைக்கப்பட்ட பைபிள் மற்றும் குரானை எடுத்து சலீம், இரண்டடையும் அங்கிருந்த பேழைக்குள் வைத்துள்ளார்.
0 Comments