இலங்கை பலம் வாய்ந்த டெஸ்ட் அணியாக தற்போது இல்லை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது.
இது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி அளித்துள்ள பேட்டியில், பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என இந்திய அணி எல்லாவற்றிலும் வலுவாக உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது.
விராட் கோஹ்லி தலைமையை சோதித்து பார்க்கும் போட்டிகள் இன்னும் வரவில்லை என கங்குலி கூறியுள்ளார்.
இலங்கை அணியில் கவலைக்குரிய அம்சங்கள் அதிகம் உள்ளன என கூறிய கங்குலி இன்றையச் சூழலில் இலங்கை பலம் வாய்ந்த டெஸ்ட் அணியாக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments