ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த மர்மத் தீவுக்கு, யுனெஸ்கோ அங்கிகாரம் அளித்துள்ளது.
ஜப்பானின்
தென்மேற்கு பகுதியில் க்யூஷூ மற்றும் கொரிய தீபகற்பத்துக்கு இடையே
அமைந்துள்ளது ஒகினோஷிமா. அங்கு ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அங்குள்ள கடற்கரைப் பகுதிக்கு செல்லும் போது, ஆடைகளை களைந்து செல்ல வேண்டும். இது அந்த தீவின் சட்டவிதி.
மாதவிடாய்க்கு
உட்படும் பெண்களின் இரத்தம் தூய்மையின்றி காணப்படுவதாகவும், அதன் காரணமாக
அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் எழுதப்படாத சட்டவிதி பின்பற்றப்பட்டு
வருகிறது.
அந்த தீவை ஷிண்டோ பாதிரியார்கள் பாதுகாத்து வருவதாக, பொதுமக்கள் நம்புகின்றனர்.
17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த தீவு, கடல் மாலுமிகளிடம் பாதுகாப்பிடம் என்று அழைக்கப்படுகிறது.
தூய்மைப்
பேணுவதற்காக, ஒரே சமயத்தில் 200 பேர் மட்டுமே தீவுக்கு செல்ல
அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த தீவை, உலக பாரம்பரிய இடங்களின்
பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.


0 Comments