Subscribe Us

header ads

பொது இடத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உடலை வர்ணித்த ட்ரம்ப்பால் சர்ச்சை


பிரான்ஸ் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியை பொதுஇடத்தில் வைத்து அவரது உடல் அமைப்பு குறித்து கூறிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு புரட்சியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14ஆம் திகதி சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்திருந்தார். 

இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்புடன் பிரான்ஸ் சென்றுள்ளார். 

பெரீசில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் முதல் பெண்மணி பிரிஜ்ஜிட் மேக்ரானை சந்தித்தார். 

இந்த சந்திப்பின் போது பிரிஜ்ஜிட்டை பார்த்து 'உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது ' என்று ட்ரம்ப்கூறியுள்ளார்.

அதோடு நிறுத்தாமல் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை நோக்கி 'உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்' எனப் புகழ்ந்து பேசியுள்ளார். 

டொனால்ட் டிரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது புகழ்ந்து பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

Post a Comment

0 Comments