Subscribe Us

header ads

கொழும்பில் பெண்கள் தொழில் செய்வதாக வீட்டில் கூறிவிட்டு கொழும்பில் விபச்சாரம்


பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடத்தி செல்லப்பட்ட முறையற்ற விடுதியை சுற்றி வளைத்த பொலிஸாரினால், மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
மாலபே பிட்டுகல பிரதேசத்தில் நடத்தி செல்லப்பட்ட நிலையம் கடந்த 19ஆம் திகதி சுற்றி வளைக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது இந்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 28, 32 மற்றும் 35 வயதுடையவர்கள். இவர்கள் கண்டி, கடவத்தை மற்றும் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கொழும்பில் தொழில் செய்வதாக தங்கள் வீட்டில் கூறிவிட்டு பாலியல் தொழில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த பெண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments