மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
புதிதாக மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து கல்வி அமைச்சும் தமக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரான மருத்துவர்கள் அடுத்து என்ன செய்வார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாலபே தனியார் வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் நோக்கில் அதன் ஆளணி வளம் ஏனைய சொத்துக்கள் தொடர்பில் அண்மையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


0 Comments