Subscribe Us

header ads

கல்பிட்டி இக்ரா சர்வதேச பாடசாலையில் பதற்றம் பெற்றோர்கள் பொலீஸில் முறைப்பாடு (படங்கள் இணைப்பு)


தற்போது கல்பிட்டி இக்ரா சர்வதேச பாடசாலைக்கு முன்பாக பதற்றமான சூழல் காணப்படுகிறது காரணம் பாடசாலை அதிபர் இடை நிறுத்தப்பட்டவுள்ளமையும் பெற்றோர் பொதுக்கூட்டம் நடாத்தப்படாமையுமே காரணம் என அறியக்கிடைத்தது இவர்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் கல்பிட்டி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் அக்மல் ஈடுபட்டுள்ளார்.

அது மட்டுமில்லாமல் கல்பிட்டி இக்ரா சர்வதேச பாடசாலை பிரச்சினை சம்பந்தமாக தற்போது கல்பிட்டி அரசியல் வாதிகளான தாரிக் ,முஸம்மில் ,அக்மல் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

பெற்றோர்களுடைய கோரிக்கை பிரச்சினைகளை பேசித்தீர்மானம் எடுப்பதற்காக உடனடியாக பெற்றோர்கள் கூட்டம் நடத்துமாறு கேற்கின்றனர் இல்லையேல் பெலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பாடசாலை நிர்வாகத்தினர் கூட்டம் தற்போது நடாத்த மறுக்கின்றனர் நோன்பு விடுமுறைக்கே கூட்டம் நடாத்தவிருப்பதாக கூறுகின்ரனர்.

இவ்வாறு பல முறை கூறப்பட்டு சுமார் மூன்று வருடங்களாக கூட்டம் நடாத்தாமல் காலதாமதமாக்ப்பட்டே காலம் செல்வதாக கூறுகின்றனர்.

அத்தோடு கல்பிட்டி இக்ரா சர்வதேச பாடசாலை பெற்றோர் இந்தக்கிழமைக்குல் பெற்றோருக்கான பொதுக்கூட்டம நடாத்துவதற்கு நிர்வாகத்திடம் அறிவிக்குமாறு கூறி கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

-Rizvi Hussain- 







Post a Comment

0 Comments