பண்டாரவளை - ஹில்ஓய புராண விகாரையின் தலைமை பிக்கு மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பிக்கு மத நிகழ்வு ஒன்றுக்கு சென்றுவிட்டு தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது இந்த தாக்குதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
வாகனத்தை வழிமறித்த சிலர் பிக்குவையும், வாகனத்தின் சாரதியையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
படுகாயமடைந்த பிக்குவும் வாகனத்தின் சாரதியும், பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


0 Comments