Subscribe Us

header ads

சிறுவனின் ஆசன வாய் பகுதியில் காற்று அடிக்கும் கருவியை பயன்படுத்தி காற்றடித்த இளைஞன் கைது


அங்கும்புர பிரதேசத்தில் விளையாட்டு வினையாகி சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அங்கும்புர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
18 வயதான இளைஞன் 16 வயதான சிறுவனின் ஆசன வாய் பகுதியில் காற்று அடிக்கும் கருவியை பயன்படுத்தி காற்றடித்துள்ளார். இரண்டு பேரும் மாறி மாறி இந்த செயலை செய்துள்ளனர்.
ஒரே நேரத்தில் அதிகளவான வாயு வயிற்றுக்குள் சென்றதால், 16 வயதான சிறுவன் சுகவீனமுற்று அங்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் காணப்பட்ட சிறுவன் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் சிறுவனின் வயிற்றில் நிரம்பி இருந்த வாயு வெளியேற்றப்பட்டுள்ளது.
சிறுவனின் தந்தை குறித்த தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். அவரை சந்திக்க வந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி அங்கும்புர பொலிஸார் 18 வயதான இளைஞனை கைது செய்துள்ளதுடன் அவரை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.

Post a Comment

0 Comments