Subscribe Us

header ads

ஐ.எஸ். அமைப்பு ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வரும் பிரச்சாரத்திற்கு எதிராக முறைப்பாடு


இலங்கையின் சில பகுதிகளில் இரத்த பரிசோதனையாளர்கள் என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பினர் ஊசி மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸை பரப்பி வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் வெளியான போலி தகவல் தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் இயக்குநர் நாயகம் மருத்துவர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவல் காரணமாக யானைக்கால் நோய் தடுப்புக்காக இரத்த பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரத்த பரிசோதனை மேற்கொள்வதாக கூறி இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் சிலர், ஊசி மூலம் ஹெச்.ஐ.வி. வைரஸை பொதுமக்களின் உடலில் செலுத்தி வருவதாக சமூக வலைதளமான பேஸ்புக்கில் தகவல் ஒன்று வெளியானது.
இது அதிகமாக பகிரப்பட்டதால், அது குறித்த தகவல் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஐ.எஸ். அமைப்பினர் இதை திட்டமிட்டு செய்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது குறித்து சுகாதார சேவைகள் திணைக்களத்திடம் கேட்ட போது, அதன் இயக்குநர் நாயகம் ஜயசுந்தர பண்டார இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக இரகசிய பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போலித் தகவலை வெளியிட்டவர் தற்போது வரை கண்டுப்பிடிக்கப்படவில்லை.
BBC

Post a Comment

0 Comments