Subscribe Us

header ads

முஸ்லிம் மையவாடி அருகில் முளைத்த சிலை -இன முறுகலை ஏற்படுத்துமா? (படங்கள்)

பாறுக் ஷிஹான்


யாழ்.கொட்டடி முஸ்லிம் மையவாடி அருகில் திடிரென ஒரு சிலை ஒரு குழுவினரால் வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஒரு குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு 6 மாதங்களுக்கு முன்னர் இச்சிலை வைப்பு தொடர்பாக அரசாங்க அதிபருக்கு அப்பகுதியில் உள்ள சமூக சேவகர் நஸீர் கடிதம் மூலமாகவும் தொலைபேசி ஊடாகவும் ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார்.

ஆனால் இச்சிலை அகற்றல் குறித்து எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.ஆனால் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் இது குறித்து அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.

எனவே இன மதங்களிற்கிடையே தேவையற்ற பிரச்சினைகளை குறித்த சிலை வைப்பு உள்ளாக்கியுள்ளதால் அதனை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனர்.

இது தவிர யாழ் கிளிநொச்சி உலமா சபை இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையல்லவா?





Post a Comment

0 Comments