Subscribe Us

header ads

இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸ் வேண்டுகோள்... (படங்கள்)


பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இது தொடர்பில் இரு சந்தேகநபர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 9ஆம் திகதி பிலியந்தலை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகள் படுகாயமடைந்திருந்தனர்.
மோட்டர் சைக்கிள் ஒன்றில் வருகை தந்தவர்களே இந்த துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்களினதும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறும், தகவல் வழங்குபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நுகேகொட பொலிஸ் பிரிவு - 071 - 8591641, 011 - 2852555
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (CCD) - 071 - 8591727, 011 - 2662323, 011 - 2685151

குறித்த புகைப்படத்தில் காணப்படுபவரின்
வயது : 30 - 35
உயரம் : 5 அடி 3 அங்குலம்


குறித்த புகைப்படத்தில் காணப்படுபவரின்
வயது : 38 - 42
உயரம் : 5 அடி 6 அங்குலம்

Post a Comment

0 Comments