Subscribe Us

header ads

கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையை மேலும் முன்னேற்ற உதவி கோருகின்றனர் (படங்கள் இணைப்பு)



பஸார் பள்ளியின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சிறிய காணியில் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரின் அயராத முயற்சியினால் அபிவிருத்தி கண்டுவரும் எமது ஊரின் முக்கிய பாடசாலைகளின் ஒன்றான கல்பிட்டி அல்ஹிரா ஆரம்ப பாடசாலையை மேலும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச்செல்வதும் எமது முக்கிய கடமையே.

ஆகவே பாடசாலைக்கு அருகில் காணப்படும் சக்தியும் பாரிய குழியுமாக காணப்படும் பாடசாலைக்கு சொந்தமான காணிப்பகுதியை நிரப்பி கட்டிடம் அமைப்பதற்கும்,பாடசாலைக்குமான மைதானம் அமைப்பதற்குமான வேலைதிட்டமொன்றை பாரிய முயற்சிக்கு மத்தியில் பாடசாலை அபிவிருத்தி சங்கம் ஆரம்பித்துள்ளார்கள்.

இதற்காக தனது சுற்றுலா விடுதியில் தோண்டப்படும் மண் அனைத்தையும் இலவசமாக வழங்குவதற்கு Kalpitiya Lagoon(pvt)Lim உரிமையாளர் முன்வந்துள்ளார்.

இருந்தாலும் இதனை சமப்படுத்தி மைதானம் அமைப்பதற்கும் பாடசாலை கட்டிடம் அமைப்பதற்குமான ஏற்றவகையில் செய்துமுடிப்பதற்கு அதிகளவினான பண உதவி தேவைப்படுவதினால் தனவந்தர்கள்,நலன் விரும்பிகள்,வெளிநாட்டில் வசிப்போர் போன்றோரிடம் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

ஆகவே பாடசாலையின் அபிவருத்திக்காக உங்கள் உதவிகளை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.


கணக்கு இலக்கம்: SDC Alhira
125100140015512
(மக்கள் வங்கி)

-Rizvi Hussain)















Post a Comment

0 Comments