Subscribe Us

header ads

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படுவாரா?

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கைது செய்யப்படலாம் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய நாட்களாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுவருவதுடன், அச்சுறுத்தல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவரும் தேரர் உட்பட்ட அந்த அமைப்பின் தரப்பினர், பல்வேறு இனவாதச் செயற்பாடுகளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இவர்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிராக 19 இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இது தவிர, குருணாகல பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று அமைச்சர் மனோகணேசனின் அலுவலகத்திற்குச் சென்ற இவர்கள் அங்கும் ரகளையில் ஈடுபட்டனர்
இதனையடுத்து அமைச்சர் பொலிஸாரில் முறைப்பாட்டினை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஞானசார தேரரை நேற்று முந்தினம் இரவு குருணாகலில் வைத்து கைது செய்வதற்கு பொலிஸார் முயன்றனர்.
ஆனால், அங்கு கூடிய இளைஞர்கள் மற்றும் அவ்வமைச்சார்ந்தோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசியல் தலைவர்களையும், தகாத வார்த்தைகளாலும் திட்டித்தீர்த்தனர்.
இதேவேளை பொலிஸாருக்கு பிடியாணை இல்லாததால் அன்றைய தினம் ஞானசார தேரரைக் கைது செய்ய முடியவில்லை.
எனினும் இன்றைய தினம் அவரைக் கைது செய்வதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இதேவேளை, நேற்று மாலை கண்டி தலதா மாளிகையின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞானசார தேரர் ஈடுபட்டார்.
எனினும் அஸ்கிரிய பீடாதிபதியின் கோரிக்கையை அடுத்து தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments