Subscribe Us

header ads

சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயை காப்பாற்றுவது யார்? (படங்கள் இணைப்பு)


சவுதி அரேபியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது தாயை அழைத்து வருவதற்கு உதவுமாறு மூன்று பிள்ளைகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுநீரகம் ஒன்றை எடுத்துக் கொள்ளும் வரையில் இலங்கைக்கு செல்ல அனுமதி வழங்குவதில்லை என சவுதி உள்ள வீட்டு உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தம்புள்ளை பகுதியை சேர்ந்த W.W.இந்திரகாந்தி என்ற 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தாய் தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தொடர்பில் மிக சிறிய வீடியோ ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதனை அவதானித்த அந்த பிரதேச இளைஞர் ஒருவர் இந்த பெண்ணின் வீட்டை தேடி சென்று பின்னர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
தந்தையை இழந்த நிலையில் மூன்று பிள்ளைகள் மிகவும் பொருளாதார கஷ்டத்துடன் தங்கள் பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றனர்.


சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணை, இளைஞர் ஒருவர் இணையத்தளம் ஊடாக தொடர்பு கொண்டுள்ளார். அதன் போது தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து அவர் விபரித்துள்ளார்.
“தான் அங்கு சென்று இரண்டு வருடங்களுக்கு அதிகம். அந்த வீட்டவர்கள் என்னிடம் சிறுநீரகம் ஒன்றை கோரியுள்ளார். சிறுநீரகம் வழங்கும் வரையில் இலங்கை செல்ல அனுமதிக்க மாட்டோம் என கூறுகின்றார்கள்.”
என்னிடம் சிறுநீரகம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இங்குள்ள நபர் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு நான் விரும்பவில்லை என்பதனால் என்னை அடிக்கின்றார்கள். உணவு வழங்குவதும் இல்லை. பல மாதங்கள் எனக்கு சம்பளம் வழங்கவும் இல்லை. உணவு வழங்காமையினால் பல முறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்.. என குறித்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்ணின் பிள்ளை உணவு இல்லாத காரணத்தினால் பாடசாலை செல்லவில்லை என இளைஞர் தெரிவித்துள்ளார்.
தனது தாயாரினால் அனுப்பப்படுகின்ற பணத்தில் வாடகை செலுத்துகின்றமையினால் தற்போது பணம் இல்லாத நிலையில் தாம் வாழ்வதாக அந்த பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments