Subscribe Us

header ads

புத்தளத்தில் வரவவிருந்த கப்பல் ஹோட்டலுக்கு நகர சபை தடை விதிப்பு


புத்தளம் நகர சபை எல்லைக்குள் வரவிருந்த கப்பல்  வடிவிலான புது வகை உணவகம் ஒன்றினை தடுக்கும் முயற்சியினால் இன்று அந்த கப்பல் அமைப்பின் முன் பக்கம் கழற்றப்படுகிறது. 

நகர சபை செயலாளரினால்  அனுப்பட்டுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது ஊரில் வித்தியாசமான முறையினை பயன்படுத்தி புது வகை ரெஸ்டூரண்ட் ஒன்று அமைக்கும் முயற்சியினை அண்மையில் கொழும்பு வீதியில் நீங்கள் அனைவரும் கண்டிருப்பீர்கள். அந்த முயற்சி இன்று செயலிழந்துள்ளது. 

எமது ஊரில் இருக்கும் எமது சமூகத்தில் உள்ள சிலர் மற்றும் பேரினவாத அரசியல்வாதி ஆகியோர் இணைந்தே  இன்று இந்த முயற்சியினை சீர்குலைத்துள்ளனர். வீதிக்கு சொந்தமான இடம், நகர சபை பதிவு நீக்கம் என பல்வேறு சிரமங்கள் எங்களை தொடர்ச்சியாக நச்சரித்துக் கொண்டே இருந்தது. இறுதியில் , சென்ற வெள்ளிக்கிழமை கப்பல் அமைப்பின் முன்பக்கத்தை அகற்றாவிடின், வழக்கு தொடரப்படும் எனும் அபாய கடிதம் கிடைத்தது.  நாங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். எதுவுமே பலனளிக்கவில்லை. எமது ஊரில் இந்த முயற்சிக்கு பல்வேறு ஆதரவும், பாராட்டுக்களும் கிடைக்கப்பெற்றன என்பதை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும். எனினும் ஒரு சிலரின் செயற்பாடுகளே இந்த முயற்சியின் தோல்விக்கு பின்புலமாக அமைந்துள்ளது.

எமது சமூகத்தில் அரசியல் ஸ்திரமற்றதன்மை மற்றும் அரசாங்க நிறுவனங்களில் எமது சமூகத்தின் பிரதிதிகளின் மிகக்குறைந்தளவிலான சேவை என்பனவே இன்று அந்த அழகிய வடிவமைப்பினை அகற்ற வைத்துள்ளது. பல லட்சக்கணக்கில் செலவழித்த இந்த தோற்றத்தினை தக்கவைக்க முடியாமல் போனது எமது ஊருக்கே கிடைத்த தோல்வி என்று சொன்னாலும் மிகையாகாது. எத்தனையோ பேரினவாத கடைகள் இன்று பல்வேறு முறைகளில் நிறங்கள், அமைப்பு மூலம் பல்வேறு கோணங்களில் மாறிக்கொண்டிருக்கும் பொழுது எமது இந்த முயற்சி மட்டுமே அவர்களின் கண்களை குத்தியுள்ளது. 

அதனால் தான் எங்களை குறி வைத்து,  வேண்டும் என்றே இந்த கப்பலின் முன்பக்கத்தை அகற்ற சொல்லியுள்ளார்கள். அதே நேரம், அவர்கள் நினைத்தால் அதன் முழு வடிவத்தையும் அகற்ற சொல்லலாம். எமது ஊரின் அரசியல், கல்வி என்பவற்றில் காணப்படும் மந்த போக்கே இதற்க்கு முழுப்பொறுப்பும் என்றால் அது மிகையாகாது. இவ்வாறான புது வகை முயற்சி ஒன்றினை ஊக்கப்படுத்த வேண்டிய  நகர சபை, அவர்கள் கையாலேயே இதனை அகற்ற சொன்னது, புதிய வியாபார முறைகளை பற்றி யோசிக்கும் யாவருக்கும் ஒரு ஏமாற்றத்தை தந்துள்ள அதே நேரம், எமது ஊருக்கும் எமது சிறுபாண்மை சமூகத்துக்கும் ஒரு பலத்த அடியாகும்.

எத்தனை தடைகள் வந்தாலும் பரவாயில்லை. நாங்கள் முயற்சி செய்வோம். எதிர்காலத்தில் 03 ஸ்டார் ஹொட்டேல் ஒன்றினை அமைக்கும் எங்கள் பயணத்தின் ஆரம்ப படி இது என்பதுடன் எங்கள் கப்பல் பயணம் இன்னும் தொடரும்.

Post a Comment

0 Comments