Subscribe Us

header ads

குவைத் - கய்தான் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கையர்கள் கைது


குவைத் - கய்தான் பகுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கைப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் இருவரில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் தங்கள் விடுதியில் பாலியல் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு இணங்க குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, விடுதிக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டுவருவதாக சந்தேகநபர் ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்த தொழிலில் மூன்று மாதங்களாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அந்நாட்டு ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments