2017.05.16 ஆம் திகதிநடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய கற்பிட்டி பிரதேச 56.35 ஹெக்டேயர் காணித்துண்டுகள் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு
கையளிப்பது தொடர்பில்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையினை
விருத்தி செய்வதற்காக காணித்துண்டுகளை பெற்றுக் கொள்ளல் (விடய இல. 11)
2020 இல் சுற்றலாப்
பயணிகளின் வருகை மூலம் 10 பில்லியன்
ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்காகச்
சுற்றுலாப் பயணிகளின்
வருகையினை 4.5 மில்லியனாக
அதிகரிப்பினை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதன் போது பிரதேச
ரீதியாக சுற்றுலா பயண முடிவிடங்களை விருத்தி செய்து, அதனுடன் தொடர்புடைய அடிப்படை வசதிகளை
விருத்தி செய்வது அவசியமாகின்றது. கற்பிட்டிப் பிரதேசமானது பல்வேறுபட்ட சுற்றுலா
கவர்ச்சி மையங்களைக் கொண்டுள்ளது என்ற வகையில் சுற்றுலா அபிவிருத்திக்கு மிகப்
பொருத்தமான இடமாகும்.
எனினும்
அப்பிரதேசத்தில் தற்போது காணப்படும் ஹோட்டல் மற்றும் பிற சுற்றுலா வசதிகளானது, உயர் தரத்திலான சுற்றுலாப்பயணிகளின்
தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமானதல்ல. அதனால் அப்பிரதேசத்தில்
சுற்றுலாத்துறையினை மற்றும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகள் மற்றும் வசதிகளை
அபிவிருத்தி செய்வதற்காக
கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள 56.35 ஹெக்டேயர் இடப்பகுதியினை 05 பாகங்களாக, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிப்பது தொடர்பில்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
https://tamil.news.lk/cabinet-decusions/item/16006-2017-05-16


0 Comments