Subscribe Us

header ads

ஞானசாரவை பேஸ்புக்கால் ஒன்றும் செய்ய முடியாது, முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிராக ஒரு பாரிய எதிர்ப்பு அலையை உருவாக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் அவரது செயற்பாடுகளுக்கு எதிராக கட்டுரை எழுதல்,வீடியோக்களை வெளியிடுதல்....


இனவாதத்துக்கு எதிராக ஒன்றும் செய்வதில்லை என்று முஸ்லிம்  அரசியல் வாதிகளைத் தூற்றுதல்....


ஜமியத்துல் உலமாவைத் தூற்றுதல்....

அரசாங்கத்தை தூற்றுதல்....

ஞானசார தரப்பு இனவதாத்தை முடக்கிவிடும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் எமது எதிர்ப்பு, மேலே சொன்ன இடத்தில் இருந்து ஒரு அணுவும் அசையவில்லை...

ஞானசாரவின் ஆட்டத்தை அடக்குவதற்கு இருக்கும் ஒரே வழி முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்றினைந்து அரசுக்கு எதிராக ஒரு சரியான அழுத்தத்தை பிரயோகிப்பது
மட்டும்தான்.


அது இந்த ஜென்மத்தில் நடப்பதற்கு சாத்தியங்கள் இருப்பதாக தெரியவில்லை.

எனவே இந்த பேஸ்புக் மாதிரியான சமூகவலைத்தலங்களை நாம் ஒற்றுமையாகப் பயன்படுத்தி இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு எதிராக ஒரு பாரிய எதிர்ப்பு அலையை உருவாக்க வேண்டும்.


அதன் தாக்கம் அடுத்த தேர்தலில் இவர்கள் அனைவருக்கும் மரண அடியாக இருக்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு உண்மையாக அழுத்தம் செலுத்தக்கூடிய ஒரு புதிய அரசியல் 
பாதையை நாம் உருவாக்க வேண்டும்.


உண்மையில் எமக்கு ஞானசாரவை பேஸ்புக்கால் ஒன்றும் செய்ய முடியாது.


ஆனால் இந்த முஸ்லிம் அரசியல் வாதிகளை அடுத்த முறை வீட்டுக்கு அனுப்பலாம்.

-Safwan Basheer-

Post a Comment

0 Comments