Roc KING Guys கடற்கரை கால்ப்பந்தாட்டக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட பகல் இரவு கடற்கரை கால்ப்பந்தாட்டத்தில் 11அணிகள் பங்கு பற்றியிருந்தன.
இச்சுற்றுப் போட்டி விலகல் முறைப் போட்டியாக நடைபெற RG champion கிண்ணத்திற்கான இறுதிப் போட்டிக்கு நடப்புச் Champion ஆன Hypher Wales அணியும் Roc KING Guys அணியும் தகுதி பெற்றது. இப்போட்டி ஆரம்பம் முதலே ஆக்ரோசமாகவும் , விறுவிறுப்பாகவும் நடைபெற முதல் பாதியில் Roc KING Guys அணி 2-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதியில் இரண்டு அணியாலும் கோல் போட முடியாமல் போக இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் அடிப்படையில் RG Champion கிண்ணம் Roc KING Guys வசமானது. இறுதிப்போட்டியில் Roc KING Guys சார்பாக Insamam மற்றும் Farhan Zee ஆகியோரால் கோல் போடப்பட்டிருந்தது. Champion அணிக்கு 15000/= ரூபா ரொக்கப் பணமும் Shaheethamas tex வெற்றிக்கிண்ணமும். இரண்டாம் இடம் பெற்ற Hypher wales அணிக்கு 10000/= ரூபா ரொக்கப் பணமும் Raheel stores கிண்ணமும் வழங்கப்பட்டது.
இப் போட்டித் தொடரின் சிறந்த வீரராக RG இன் Insamam தெரிவு செய்யப்பட்டு அவருக்கு 1000/= ரூபா ரொக்கப் பணமும் Mujeeb books கிண்ணமும் வழங்கப்பட்டது..




0 Comments