Subscribe Us

header ads

மொஹமட் நிஷோஸின் (முட்டாளாக்கல் ) கவிதை தொகுப்பு.



முதற் தேதி தேவை இல்லை
முட்டாளாய் ஆக்கி விட
இதைத்தானே செய்கின்றார்
எந் நாளும் சில மனிதர்.

முன்ன ஒரு காலத்திலெ
முருங்க மரக் காட்டுக்குள்ள
முன்னூறு அடி அவுலியா என
முட்டாளாக்கிக் கதை சொல்லல்

அரபியிடம் காசி வாங்கி
அரைவாசி பையில் போட்டு
சிறிய தொகை தானம் செய்து
செம்மலாகி முட்டாளாக்கல்

ஆண் ஐடி போஸ்ட் போட்டு
அதற்குப் பெண் ஐடியிலே
தானே புகழ்ந்தெழுதி
கேணயனாய் ஆக்க நினைத்தல்.

இன்னும் ஒரு பஸ் வர
ஸ்டாண்டடில் இருக்கும் தன் பஸ்ஸை
முன்னெடுப்பது போல் செய்து
பின்னர் நிறுத்தி முட்டாளாக்கல்.

மீட்டர் ஆட்டோ என
மினு மினுக்க போட் போட்டு
கேட்காமல் ஏறிய பின்
ரேட் கேட்டு முட்டாளாக்கல்.

மலிவாகத் தாரம் என்று
கழிவாகிப் போன பொருளை
கழிவு வீதம் போட்டு விற்று
பல பேரை முட்டாளாக்கல்.

சிசிடிவி கமராவிலே
சிக்கிய பேய் என்று
வாசகரை முட்டாளாக்கி
தூசு கிளம்பும் படம் போடல்

முந்திய ஆட்சி செய்த
மோசமான ஊழல் காட்டி
இந்த ஆட்சி ஊழல்களை
இருட்டடித்து முட்டாளாக்கல்

குஜராத் மக்களை
குஜால் வேலைக்கு அனுமதித்து
ஹஜரத் மாடறுத்தால்
கசையடித்து முட்டாளாக்கல்.

ஏப்ரல் 01ல் முட்டாளாக்கல்
இன்பம் என்று நினைத்துக் கொண்டு
அடுத்தவரை முட்டாளாக்கல்
ஆகப் பெரிய முட்டாள் (தி)தனம்.

Post a Comment

0 Comments