பாறுக் ஷிஹான்
படித்தாலும் கஸ்டம் என்பார்கள் சிலர் படிக்காவிட்டாலும் அதே கதிதான் என்பார்கள் பலர் யாழ் மாவட்ட செயலகத்தில் வேலையற்ற பட்டதாரிகள் அடிக்கடி பேசிக் கொள்கின்ற விடயம் இது....
இந்நிலையில் தற்போது யாழ் மாவட்ட செயலகம் முன்னால் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டு வரும் போராட்டம் பல்வேறு பட்ட தரப்பினரை சென்றடைந்துள்ள போதிலும் 34 நாட்கள் கடந்து விட்டது.
இந்நிலையில் தான் பாடசாலை மாணவர்கள் தற்போது அப்பட்டதாரிகளின் நிலைமைகளை பார்வையிட வந்துள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளனது.
புகைப்படத்தில் உள்ளவாறு அவர்கள் ஏதோ அங்கு தொங்கும் விளம்பர வாசகங்களை ஆர்வத்துடன் வாசிப்பதை அவதானிக்க முடிகின்றது.
இவர்கள் தற்களுக்குள் அப்படி என்ன பேசி இருப்பார்கள்.....
( தம்பி படிடா படிச்சாத்தான் நல்ல வேலைக்கு போகலாம் என்டு அம்மா சொல்றாங்கள் ஆனா இந்த அக்கா அண்ணமார் படிச்சிட்டு தானே வேலை இல்லாம இருக்கிறார்கள்-அந்த பாடசாலை சிறுவர்களின் உள்ளம் பேசி இருக்குமோ)


0 Comments