வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜோங் சில அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி அணுகுண்டு சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டு வந்தார்.
இதற்கு அமெரிக்கா மற்றும் தென் கொரியா உட்பட உலகநாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இதுவரை ஐந்து அணுகுண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் வட கொரியாவை சீனா கண்டிக்க தவறினால் அமெரிக்கா கடுமையான முடிவை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு வடகொரிய தரப்பில் அமெரிக்கா தங்களை தாக்கினால், தாங்களும் மீண்டும் தாக்குவோம் என்று என்று பதிலடி கொடுத்தது. அதன் விளைவாக வட கொரியா தலைநகர் பியோங்கியாங்கில் இருந்து 6 லட்சம் பொதுமக்களை வெளியேற்ற கிம் அரசு உத்தரவிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது தனது ஆறாவது அணுகுண்டு சோதனையை வடகோரியா தனது கிழக்கு கடற்கரையில் மேற்கொண்டது. எனினும் வடகோரியாவின் இந்த சோதனை தோல்வியில் முடிந்துள்ளதாக, தென்கோரிய இராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வடகொரியா மேற்கொண்ட இந்த அணுகுண்டு சோதனை எந்த வடிவிலான சோதனை என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
இதே வேளை தென்கொரிய இராணுவம் தெரிவித்த கருத்தை அமெரிக்காவின் விசேட அதிரடிப்படையும் உறுதி செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அமெரிக்க படை அண்மையில் ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்தனர்.
0 Comments