Subscribe Us

header ads

சிலாபம் நகரில் ஓடித் திரிந்த சாத்தான்கள்! மக்கள் பீதி..


சிலாபம் நகரில் இன்று வித்தியாசமான சிலர் அலைந்து திரிந்ததை காணக்கூடியதாக இருந்தது.
உடல் முழுவதும் கறுப்பு நிற வர்ணத்தை பூசிக்கொண்ட இவர்கள் சாத்தான்கள் என கூறப்பட்டது.
கத்தோலிக்க வழிப்பாட்டை முறையாக இவர்கள் தமது உடலில் கறுப்பு நிற வர்ணத்தை பூசிக்கொண்டு நகரில் வலம் வந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் சிலாபம் நகர் முழுவதும் ஓடி திரிந்தனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்த புனித பெரிய வெள்ளியை நினைவுகூறும் வகையில் கத்தோலிக்க பக்தர்கள் சாத்தான்களாக வேடம் தரித்துள்ளனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டு மரித்த போது தி ஜெருசேலம் தேவாலயத்தின் திரை சேலை மேலிருந்து கீழாக கிழிந்ததாகவும் அப்போது சாத்தான்கள் சிதறியோடியதாகவும் கூறப்படுகிறது.

Seyed Nawas

Post a Comment

0 Comments