Subscribe Us

header ads

ஹஜ் பெருநாளில் மாடு அறுக்க அனுமதிக்க வேண்டாம்


முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளை முன்னிட்டு (குர்பான்) மாடுகளை அறுப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டாமென சிங்கள ராவய வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான அனுமதி கோரப்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்குமாறு உள்ளுராட்சி சபைகளை ராவய பலய (ராவண சக்தி) கேட்டுள்ளது.

ராவய பலயவின் தலைவரான அக்மீமன தாயரத்ன தேரர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், சிங்கள பௌத்தர்களும் இந்து சமய பிரமுகர்களும் மாடு அறுப்பதற்கு தங்களது முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அதனை நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

மாடறுப்பது போன்ற பாவ காரிய செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்குதல், அனுமதித்தல் போன்றன விரோதமான செயல்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments