Subscribe Us

header ads

எங்கே செல்கிறது இலங்கை முஸ்லிம் அரசியல்


முஸ்லிம்களின் அரசியலில் இருக்க முடியாத பண்புகளே ஊழல், மோசடி, நம்பிக்கை துரோகம், இன்னொருவர் மீது வசைபாடுதல், காட்டிக்கொடுத்தல், கொள்கைமாறல், பொய்யான பிரசாரங்களை பரப்புதல், புனைப்பெயர்களுடன் வந்து ஏனையோரை தூற்றல் என்பன ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கை முஸ்லிம் மக்களின் அரசியலே மேற்சொன்ன பண்புகளை பிரதான பண்புகளாக கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டிய அவசியமும் இல்லை. 

இவ்வாறன அரசியலாளோ, அரசியல் வாதிகளாளோ முஸ்லிம் சமூகம் இறை உதவியை பெறப்போவதுமில்லை.

இறைவன் இறக்கப்பார்வையினை பார்க்கப்போவதுமில்லை. 

இலங்கை முஸ்லிம்களுக்கு பர்மா முஸ்லீம்கள் போன்று சோதனை வந்தாலும் நீங்கள் தேசியதலைவராக பார்க்கின்றவர்கள் தேசிய தலைவராக வரப்பார்க்கின்றவர்கள் அன்றும் அதே அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டு அரசாங்கத்தொடு பேசுகிறோம் என அறிக்கை விடுவார்களே தவிர அவர்களால் ஆவப்போவது ஒன்றுமில்லை.

பணத்தாசை யும் பதவியாசையும் எவனிடத்தில் வந்து விடுமோ ஆட்டு மந்தைக்குள் புகுந்த ஓநாய் போல சமூகத்தை சிரழித்து விடுவான் என்றார்கள் நபியவர்கள். புலி யை உதாரணம் காட்டாமல் ஓநாயை ஏன் உதாரணம் காட்டினார்கள் என்றால் புலி பசித்தால் பசிக்கு போதுமான அளவு ஒரு ஆட்டையோ இரு ஆட்டையோ அடித்து கொன்று தனது பசி தீர்ந்தவுடன் வெளியேறிவிடும் ஆனால் ஓநாயோ ஆசையின் உச்சத்தால் அனைத்து மந்தைகளையும் அங்கும் இங்கும் பாய்ந்து சீரழித்து காயப்படுத்தும். இவ்வாறான நிலைமையைதான் இறைய முஸ்லிம் அரசியலில் பார்க்கின்றோம். பதவிக்காகவும் பணத்துக்காகவும் ஏக கொள்கையுடன் கன்னியமாக வாழ வேண்டிய சமூகத்தை கட்சி என்றும் கொள்கை என்றும் பிரித்து மலினப்படுத்தி வீரத்தோடு வாழ வேண்டிய சமூகத்தை பொன்னையர்களாக மாற்றி ஒரு சிலர் அரசியல் இலாபம் தேடுகின்ற நிலையினை சிந்தித்த இளைஞர்கள் எத்தனை பேர்?

சமூகத்துக்கு பிரச்சினை வரும்போது முதலில் அரசியல் வாதிகளின் நினைவு வராமல் எப்போது எம்மை படைத்த இறைவன் நினைவு வருமோ அன்று தான் இலங்கையில் முஸ்லிம் அரசியல் உருவாகப் போகிறது. அன்றைய நாளுக்காக காத்திருக்கும் இவன்.

SIFAS NAZAR

Post a Comment

0 Comments